FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமித் ஷா பதவி விலக வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது குறித்து...

Updated On : 31 ஜூலை 2026, 11:41 am IST
மத்திய அமைச்சர் அமித் ஷா - கோப்புப் படம்
பகிர்:

நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தாக்குதலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, " பிரதமர் மோடி அவர்களே, 10 நாள்களுக்கு முன்பாக, உங்கள் அரசு (பாஜக) இளைஞர்கள் மீது தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியது.

மாணவர்கள் தங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையின்பேரில் போராட்டத்தை திரும்பப் பெற்றதும், இப்போது நீங்கள் பழிவாங்கும் உணர்வில் அவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்கிறீர்கள்.

Advertisement

Advertisement

அவர்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கிறீர்கள். இளைஞர்களின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்குகிறீர்கள். பெண்களின் தனிப்பட்ட தகவல்களைக் கசிய விடுகிறீர்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் காலடிகூட எடுத்துவைக்கவில்லை. அவர் பொறுப்பு கூறுவதற்கும் பயப்படுகிறார். அமித் ஷாவை ராஜிநாமா செய்யச் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

summary

Congress leader Mallikarjun Kharge has urged Home Minister Amit Shah to resign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments