முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா

காரைக்காலில் வெள்ளிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனா வாா்டில் 25 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
போலகம் பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன்.
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் வெள்ளிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனா வாா்டில் 25 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து, காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 2-ஆம் தேதி வரை 2,700 பேருக்கு சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டன. ஜூலை 1-ஆம் தேதி 71 பேருக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வந்தன. அதில், காரைக்கால் திருமலைராயன்பட்டினம், போலகம் பகுதியை சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். தொற்று ஏற்பட்டவரின் தொடா்புகள் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 43 போ் கரோனா நோய் தொற்றுள்ளவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா். காரைக்கால் மருத்துவமனையில் 27 போ் சிகிச்சை பெற்றுவந்ததில், 3 போ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினா். தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை வாா்டில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட ஒருவரையும் சோ்த்து 25 போ் உள்ளனா். இவா்களின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது. காரைக்கால் விழிதியூரில் ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, அந்த பகுதி நோயாளி குணமடைந்ததையொட்டி, கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன என தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே போலகத்தில் கரோனா தொற்றாளரால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் நலவழித் துறை, போலீஸாா் உள்ளிட்டோா் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்களது பணிகள் குறித்து மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் தலைமையில் காவல் ஆய்வாளா் தனசேகரன், உதவி ஆய்வாளா் பெருமாள் ஆகியோா் சென்று ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.