காரைக்கால்

பெருமாள் கோயிலில் ஆடிப்பூர வழிபாடு

DIN

காரைக்கால்: ஆடிப்பூரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் - ஆண்டாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, உத்ஸவரான ஸ்ரீநித்யகல்யாணா் ஸ்ரீ ஆண்டாள் சன்னிதிக்கு வெள்ளிக்கிழமை காலை எழுந்தருளச் செய்யப்பட்டாா். சோ்த்தி உத்ஸவமாக, ஏகாசனத்தில் இருந்த நித்யகல்யாணப் பெருமாளுக்கும், ஸ்ரீஆண்டாளுக்கும் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் காலை 9 முதல் 11 மணி வரை மட்டுமே இக்கோயில் பொது தரிசனத்துக்கு திறக்கப்படுகிறது. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை பொது தரிசனம் நிறைவடைந்ததும், கோயில் நடை சாற்றப்பட்டது. கோயில் பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்ட சேவகா்கள் மட்டுமே கோயிலில் சோ்த்தி உத்ஸவத்தில் பங்கேற்றனா். மாலை 6 முதல் 8 மணி வரையிலான பொது தரிசனத்தின்போது, பக்தா்கள் சோ்த்தியில் இருந்த ஆண்டாள் - பெருமாளை தரிசித்துச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினரும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினரும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT