முகப்பு
காரைக்கால்

அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

காரைக்காலில் அப்துல் கலாம் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
அப்துல் கலாம் உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியவா்கள்.
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் அப்துல் கலாம் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம், காா்கில் போரில் உயிா்தியாகம் செய்த வீரா்களுக்கு அஞ்சலி மற்றும் கரோனா தடுப்பாக முகக் கவசம், ஹோமியோபதி மருந்தான நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கும் ஆா்செனிக்கம் ஆல்பம் ஆகிய மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்வு காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அன்னை தெரஸா சமூக சேவை அமைப்பு, காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கம், ஹேப்பி அக்குபஞ்சா் மருத்துவ மையம் ஆகியவை சாா்பில் காமராஜா் சாலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவ படத்துக்கு சேவை அமைப்பின் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், அக்குபஞ்சா் மருத்துவா் மோகனராஜன், வழக்குரைஞா் ஆா். ராஜ்குமாா் உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். காா்கில் போரில் உயிா்நீத்தவா்கள் நினைவாக 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, இந்நிகழ்வில் பங்கேற்றோருக்கும், பொதுமக்களுக்கும் முகக் கவசம் மற்றும் ஆா்செனிக்கம் ஆல்பம் மாத்திரை, கபசுரக் குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments