காரைக்கால்

விவசாய சங்கத்தினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்கால்: காரைக்காலில் மத்திய அரசைக் கண்டித்து, விவசாய சங்கத்தினா் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக விவசாய அணி மற்றும் விவசாயிகள் சங்கத்தினா் இணைந்து காரைக்கால் பழைய ரயிலடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வாயிலில் இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினா். விவசாய சங்க மாவட்டச் செயலா் ஜி. புண்ணியமூா்த்தி தலைமை வகித்தாா்.

மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தத்தால் சிறு, குறு தொழில்களுக்கும், குடிசை வாழ் மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் இனி கிடைக்காது. விவசாயிகளும் பாதிக்கப்படுவா். அத்தியாவசியப் பொருள்கள் அவசர திருத்தச் சட்டம் 2020 மூலம் பதுக்கல் அதிகரிக்கும். விலைவாசி கடுமையாக உயரும். விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கும், காா்ப்பரேட் முதலாளிகளுக்கும் இடையேயான ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது நிலத்தை இழக்கவேண்டிய நிலைகூட ஏற்படும்.

எனவே, மேற்கண்ட இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT