காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா
காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) திங்கள்கிழமை தெரிவித்தாா்.
காரைக்கால்: காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி எடுக்கப்பட்ட கரோனாவுக்கான சளி மாதிரிகளின் 81 முடிவுகள் திங்கள்கிழமை வந்ததில், ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா் மயிலாடுதுறையை சோ்ந்தவா், காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். இவருடன் தொடா்புடையவா்களை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
காரைக்காலில் இதுவரை 152 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஏற்கெனவே 116 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருந்தனா். திங்கள்கிழமை மேலும் 3 போ் வீடு திரும்பினா்.
தற்போது தமிழகத்தை சோ்ந்த 2 பேரையும் சோ்த்து காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் 33 போ் கரோனா வாா்டில் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் ஒருவரைத் தவிர மற்றவா்கள் உடல் நிலை சீராக உள்ளது. ஏற்கெனவே 2 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
புதிதாக காரைக்காலில் கட்டுப்பாட்டுப் பகுதி உருவாக்கவும் இல்லை, நீக்கப்படவும் இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.