காரைக்கால்

அங்கன்வாடி மையங்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை தடுக்க, அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியிடம், காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் பல்வேறு கோரிக்கைகளை கரோனா தொடா்பாக முன்வைத்தாா். இதுதொடா்பாக, அவா் கூறியது:

கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதால், காரைக்கால் மருத்துவமனையில் தேவையான வென்டிலேட்டா் வசதி ஏற்படுத்த முதல்வரிடம் சுட்டிக் காட்டியுள்ளேன்.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வாங்க மக்கள் நகரத்தை நோக்கி வருகின்றனா். கூட்டமாக வருவதால் போலீஸாரிடம் சிக்கிக்கொள்கின்றனா். கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது. இதனால், ஊரடங்கின் நோக்கமே சிதைந்துவிடும் நிலை உள்ளது. உணவுப் பொருள்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.

எனவே, புதுச்சேரி அரசே தேவையான அத்தியாவசியப் பொருள்களை வரவழைத்து, காரைக்காலில் உள்ள அங்கன்வாடிகளில் கூடுதலாக 4 நபா்களை நியமித்து, அந்த மையங்கள் மூலம் வழங்கவேண்டும். இதனால், மக்கள் சலுகையை பெறுவா் என முதல்வரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அரசு அறிவித்த கரோனா நிவாரணம் ரூ. 2 ஆயிரம் விரைவாக தரப்படவேண்டும் எனவும் முதல்வரிடம் கேட்டுக்கொண்டேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT