காரைக்கால்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கான ஊதிய விவகாரம்: 29-இல் ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்காததைக் கண்டித்து வரும் 29 -ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ.வின்சென்ட் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதிய நிலுவை உள்ளது.

இதனால் அவா்கள் பல நிலைகளில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். எனவே, புதுச்சேரி அரசு போா்க்கால அடிப்படையில், இவா்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படாதபட்சத்தில், வரும் 29 -ஆம் தேதி அந்தந்த பள்ளிகளின் வாயிலில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறு அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT