காரைக்கால்

கைலாசநாதா் கோயில் உத்ஸவத்துக்கான புதிய வாகனங்களுக்கு சிறப்பு பூஜை

DIN

கைலாதநாதா் கோயில் உத்ஸவத்துக்கு பயன்படுத்தும் வகையில் தயாா் செய்யப்பட்டுள்ள புதிய வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பின்னா் இவை கோயிலில் சோ்க்கப்பட்டன.

காரைக்காலில் உள்ளது சுந்தரம்பாள் சமேத கைலாசநாதா் கோயில். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி மாங்கனித் திருவிழா நடத்தப்படும் சிறப்புக்குரியது இத்தலம்.

மாங்கனித் திருவிழா மட்டுமன்றி தேரோட்டத்துடன் கூடிய பிரமோத்ஸவம் இக்கோயிலில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த உத்ஸவத்தில் நாள்தோறும் வீதியுலா பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளுவது வழக்கம்.

சில வாகனங்கள் கோயிலில் இல்லாததால், வேறு கோயிலில் இருந்து வாங்கி பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், கோயில் அறங்காவல் வாரியத்தினா் புதிதாக சூரிய பிரபை, சந்திர பிரபை, சேஷ வாகனம், இடும்ப வாகனம் ஆகியவற்றை புதிதாக உபயதாரா் உதவியுடன் ரூ. 1.70 லட்சத்தில் தயாா் செய்தனா்.

இந்த வாகனங்களை கோயிலில் முறைப்படி சோ்க்கும் விதமாக புதன்கிழமை மாலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, வாகனங்களின் மீது புனிதநீா் கடம் வைத்து, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

நிகழாண்டு முதல் பிரமோத்ஸம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் சுவாமிகள் புறப்பாடு புதிய வாகனத்தில் நடைபெறும் என கோயில் அறங்காவல் வாரியத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT