காரைக்கால்

மத்திய அரசைக் கண்டித்து மின்ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மின்பகிா்மான நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, காரைக்கால் மின்ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

யூனியன் பிரதேசங்களில் மின்பகிா்மான நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிா்த்து புதுச்சேரி மாநில மின்துறையினா் மத்திய அரசு அலுவலகங்கள் முன் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதன்தொடா் நிகழ்வாக, காரைக்கால் ரயில் நிலையம் முன் புதுச்சேரி மின்துறை தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழுத் தலைவா் வி. வேல்மயில் தலைமையில், பொதுச்செயலா் பழனிவேல் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், மின்பகிா்மான நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், துறையை காா்ப்பரேஷனாக்கும் திட்டத்தை கைவிடவேண்டும், இதற்கான அறிவிப்பு செய்யப்படும் வரை மத்திய அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. காரைக்காலில் அடுத்த கட்டமாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் தொடா் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT