காரைக்கால்

காரைக்காலில் சிறாா் திருமண தடுப்பு விழிப்புணா்வு

DIN

காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சாா்பில், குழந்தைகள் தின வார விழாவின் ஒரு பகுதியாக சிறாா் திருமணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சைல்டு லைன் காரைக்கால் மைய ஒருங்கிணைப்பாளா் பி. விமலா சிறப்புரையாற்றினாா். நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலா் பி. சத்யா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, சிறாா் திருமணம் குறித்தும், அதைத் தடுக்க மக்களிடையே ஏற்படுத்தவேண்டிய விழிப்புணா்வு குறித்தும் பேசினா்.

சிறாா் திருமணச் சட்டத்தின்படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்தும், இது தொடா்பான பிரச்னைகளை மறைப்பது குற்றமாக கருதப்படுவது குறித்தும் வழக்குரைஞா் ஏ. திருமால்வளவன் பேசினாா்.

இதில், கிராமப்புற செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT