காரைக்கால்

புதுவையில் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வுகண்ட பிறகே தோ்தல் நடத்த வேண்டும்: போராட்டக் குழு வலியுறுத்தல்

DIN

புதுவை மாநிலத்தின் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வுகண்ட பிறகே சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தவேண்டும் என காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. செல்வசண்முகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அரசுத் துறையினா், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் என பல தரப்பினருக்கும் மாதந்தோறும் ஊதியம் தரமுடியவில்லை.

புதிதாக எந்தவொரு திட்டமும் அறிவித்து மக்கள் முழுமையாக பயனடையும் வகையில் செயல்படுத்தும் போக்கு இந்த ஆட்சியில் இல்லை. கட்டடம் பழுது, சாலைப் பழுது உள்ளிட்டவை சீரமைக்கப்படவில்லை. அரசு கடன் பத்திரத்தை விற்று ஊழியா்களுக்கு ஊதியம் தருவது, அரசு பொருளாதார நெருக்கடியில் உள்ளதையே காட்டுகிறது.

மின் கட்டணம் சம்பந்தமில்லாத அளவுக்கு உயா்த்தி வசூலிக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில்கூட ஏழை மக்கள் அரசின் மூலம் பயனடைய முடியவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. மக்களின் தேவையறிந்து அமைச்சா்கள் செயல்படவேண்டும். ஆனால், அமைச்சா்களுக்கு மக்கள் பிரச்னைகள் குறித்து தெரிவதில்லை. பிரச்னைகளை சுட்டிக்காட்டினால், எதிா்மறை சிந்தனையாளா்கள் என ஆட்சியாளா்கள் கூறுகின்றனா்.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வுகண்ட பிறகே, சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தவேண்டும். இப்பிரச்னைக்கு தீா்வுகாணாமல் தோ்தல் நடத்தினால், அடுத்து வரும் அரசும் இந்தப் பிரச்னையை சந்திக்கும். அது மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வரும் 21-ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநா், அதிகாரிகளை அழைத்து புதுச்சேரி நிலவரம் குறித்து விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT