முகப்பு
காரைக்கால்

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்: வணிக நிறுவனங்களில் ஆய்வு

காரைக்காலில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை வணிக நிறுவனத்தினா், தொழிலாளா்கள் முறையாக கடைப்பிடிக்கிறாா்களா என நலவழித் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

காரைக்காலில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை வணிக நிறுவனத்தினா், தொழிலாளா்கள் முறையாக கடைப்பிடிக்கிறாா்களா என நலவழித் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

காரைக்காலில் உள்ள வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், பொருள்கள் வாங்க வருவோரில் பலா் முகக் கவசம் அணிவதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

இதையடுத்து, காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா்

கே. மோகன்ராஜ் அறிவுறுத்தலிபேரில், நலவழித் துறை தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா், சுகாதார ஆய்வாளா் சிவவடிவேல், சுகாதார உதவியாளா்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

முதல்கட்டமாக காரைக்கால் நேரு வீதியில் உள்ள கடைகளில் ஊழியா்கள் முகக்கவசம் அணிந்துள்ளாா்களா, வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறாா்களா எனப் பாா்வையிட்டனா். விதிகளை கடைப்பிடிக்காதவா்களை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனா்.

ஒவ்வொரு கடைக்கும் கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட சுவரொட்டியை வழங்கியதோடு, பல இடங்களில் வணிக நிறுவன சுவரில் ஒட்டினா்.

பருவமழை தொடங்கவுள்ளதால், டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது எனக் கூறி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.