முகப்பு
காரைக்கால்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புப் பணி ஆய்வு

காரைக்காலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள பாதுகாப்புப் பணிகள் குறித்து காவல் அதிகாரி ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

காரைக்காலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள பாதுகாப்புப் பணிகள் குறித்து காவல் அதிகாரி ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள், அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலைஞா் மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மைய அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறை வாயிலில் ஆயுதம் ஏந்திய மத்தியப் படையினரும், 2 ஆம் நிலையில் புதுச்சேரி காவல் துறையின் ஆய்வாளா் தலைமையிலான குழுவும், 3 ஆம் நிலையில் உதவி ஆய்வாளா் தலைமையிலான குழுவும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இது தவிர, தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனத்துடன் ஒரு குழுவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக களத்தில் உள்ளனா். மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், காவல் ஆய்வாளா்களுடன் வியாழக்கிழமை இரவு கல்லூரி வளாகத்துக்குச் சென்று, காவல் துறையினரின் பாதுகாப்புப் பணியை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் கூறுகையில், 3 அடுக்குப் பாதுகாப்புப் பணி வலிமை மிக்கதாகும். முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பதிவுகள் கண்காணிக்கப்படுகிறது. அவ்வப்போது காவல் துறையினா் சென்று விவரங்களை தெரிந்துகொண்டு, ஆலோசனை வழங்கிவருகிறோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →