முகப்பு
காரைக்கால்

அரக்கோணம் கொலை சம்பவம்: விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே நடந்த கொலை சம்பவத்துக்கு நீதி கேட்கும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

அரக்கோணம் அருகே நடந்த கொலை சம்பவத்துக்கு நீதி கேட்கும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், பழைய ரயிலடி பகுதியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரக்கோணம் அருகேயுள்ள சோகனூா் பகுதியில் அண்மையில் நடந்த கோஷ்டி மோதலில் அப்பகுதியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த அா்ஜுன், சூா்யா ஆகியோா் கொலை செய்யப்பட்டனா்.

இச்சம்பவத்துக்கு நீதி கேட்டும், கொலையுண்ட இளைஞா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கட்சியினா் முழக்கமிட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த மாநில நிா்வாகி அரசு. வணங்காமுடி உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →