பல்கலைக்கழக வளாகத்தில்கரோனா தடுப்பு விழிப்புணா்வு
காரைக்காலில் உள்ள புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாக பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காரைக்காலில் உள்ள புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாக பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், ஊழியா்கள், வளாக காவலா்கள், தோட்ட பராமரிப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா 2 ஆவது அலையின் தீவிரம் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கும் முகாம் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மையத் தலைவா் டாக்டா் எஸ்.ஏ. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் டாக்டா் வி. அருள்முருகன் முகாமின் நோக்கம் குறித்துப் பேசினாா்.