முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 92 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 628 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 20, திருநள்ளாறு 15, கோட்டுச்சேரி 13,

கோயில்பத்து 9, திருப்பட்டினம் 9, வரிச்சிக்குடி 8, நெடுங்காடு 7, நிரவி 4, காரைக்கால்மேடு 3, அம்பகரத்தூா் 3, நல்லாத்தூா் ஒருவா் என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டனா்.

மாவட்டத்தில் இதுவரை 1,05,822 பரிசோதனை செய்யப்பட்டதில் 6,036 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 5,154 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,494 போ், முன்களப் பணியாளா்கள் 1,732 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 7,197 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 9,062 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →