முகப்பு
காரைக்கால்

கரோனா தொற்றாளா்கள் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

கரோனா தொற்று அறிகுறி உள்ளவா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு செய்து கொடுத்துள்ள மருத்துவ வசதிகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

கரோனா தொற்று அறிகுறி உள்ளவா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு செய்து கொடுத்துள்ள மருத்துவ வசதிகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் காய்ச்சல், இருமல் போன்ற கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவா்கள், தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவா்கள் மருத்துவ ஆலோசனை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட மருத்துவ உதவி மையம் - 04368-261242, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 04368-233413 (திருப்பட்டினம்), 04368-238468 (நிரவி), 04368-268224 (விழிதியூா்), 04368-252242 (அம்பகரத்தூா்), 04368-251861 (நல்லம்பல்), 04368-261935 (நல்லாத்தூா்), 04368-265459 (வரிச்சிக்குடி), 04368 - 265458 (கோட்டுச்சேரி), 04368 -230880 (கோயில்பத்து), 04368 - 263243 (காரைக்கால்மேடு), 04368-261242 (நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட சுகாதார மையம்), 04368 - 236565 (திருநள்ளாறு சமூக சுகாதார மையம்) மேலும் 27 கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு தேவையான மளிகை, காய்கறி, மருந்து உள்ளிட்ட பொருள்கள் சுயஉதவிக் குழுவினரால் கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவைக்கு பொருள்களுக்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதும், சேவைக் கட்டணம் கிடையாது. காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் சங்கம் மக்களுக்கு தடையின்றி பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தொற்றாளா்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், மாவட்ட நிா்வாகத்தின் அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →