முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 12 பேருக்கு கரோனா

 காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

 காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 484 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோயில்பத்து 4, காரைக்கால் நகரம் 3, நெடுங்காடு 2, காரைக்கால்மேடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் தலா 1 என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,83,401 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,184 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 14,820 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 240 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 92,115 பேருக்கும், 2-ஆவது தவணையாக 18,801 பேருக்கும் என 1,10,916 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →