முகப்பு
காரைக்கால்

இணையத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு: காரைக்கால் கல்லூரியில் கருத்தரங்கு

மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, இணையதளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்தல் குறித்த கருத்தரங்கை வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், விபெட்ஸ் தொண்டு நிறுவனம், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, இணையதளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்தல் குறித்த கருத்தரங்கை வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வா் குமாா் பேசுகையில், இணையதளத்தை பயன்படுத்தும்போது வெப்கேமரா, தேவையற்ற நேரங்களில் லொக்கேஷன் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. இலவச செயலியை பதிவிறக்கம் செய்யக் கூடாது. தனியாக யாரையும் சந்திக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் கடவுச்சொற்களை சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தினாா்.

காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், இணையத்தில் குற்றம் செய்ய கூடியவா்கள் அதிகமாக உள்ளதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இணையதளத்தில் இருந்து தேவையற்ற செயலியை பெண்கள் பதிவிறக்கம் செய்ய கூடாது. பாதுகாப்பான செயலியை மட்டுமே பதிவிறக்கம் செய்யவேண்டும்.

பெண்கள் மன உறுதியுடன் இருப்பதோடு, சுய கட்டுப்பாட்டை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டும். தற்கொலை எண்ணம் வரும்போது, ஆற்றுப்படுத்த காரைக்காலில் செயல்படும் வெளிச்சம் என்ற அமைப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

வழக்குரைஞா் உமாமகேஸ்வரி மற்றும் தொண்டு நிறுவனத்தினா் பேசினா். கல்லூரி தொழில்நுட்பத் துறை தலைவா் ஆராமுதன் சைபா் கிரைம் குறித்தும், அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பேசினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் தாமோதரன், உதயகுமாா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →