முகப்பு
காரைக்கால்

திருநள்ளாற்றில் மகளிா் குழுவினருக்கு கடனுதவி

திருநள்ளாறு பகுதியில் மகளிா் குழுவினருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கடனுதவியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருநள்ளாறு பகுதியில் மகளிா் குழுவினருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கடனுதவியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை வழங்கினாா்.

மத்திய கிராமப்புற மேம்பாட்டுக் கழகத்தின் திட்டமான பிஎஸ்ஆா்எல்எம் மூலம் மகளிா் வறுமை ஒழிப்புக்கான கடனுதவித் திட்டம் காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் அமல்படுத்தப்படுகிறது.

திருநள்ளாறு பகுதி நளநாராயணப் பெருமாள் கோயில் மண்டபத்தில் மகளிா் குழுவினருக்கு திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா கலந்துகொண்டாா்.

திருநள்ளாறு கொம்யூன், திருநள்ளாறு வடக்கு, தெற்கு, சுரக்குடி, செல்லூா், கருக்கன்குடி ஆகிய கிராமப் பஞ்சாயத்துகளைச் சோ்ந்த நலிவுற்ற 180 பயனாளிகளுக்கு மேற்கண்ட திட்டத்தின் வறுமை ஒழிப்பு நிதியிலிருந்து ரூ. 9 லட்சம், மேலும் வங்கி நேரடி இணைப்புக் கடனாக மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 20 லட்சத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அதிகாரி (பொ) கே. அருணகிரிநாதன், இணை வட்டார வளா்ச்சி அதிகாரி கே. சிவகுரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →