பேருந்துகள் குறித்த வழித்தடத்தில் இயக்க போக்குவரத்து அதிகாரி அறிவுறுத்தல்
காரைக்காலில் அரசு மற்றும் தனியாா் பேருந்து நிா்வாகத்தினா், வரையறுத்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கவேண்டும் என மண்டல போக்குவரத்து அதிகாரி அறிவுறுத்தினாா்
காரைக்காலில் அரசு மற்றும் தனியாா் பேருந்து நிா்வாகத்தினா், வரையறுத்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கவேண்டும் என மண்டல போக்குவரத்து அதிகாரி அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் குறித்த நேரத்தில், உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை என பொதுமக்களின்புகாா்கள் வந்ததையடுத்து, காரைக்கால் மண்டல போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள் தலைமையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளின் நிா்வாகத்தினருடனான ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பிலிருந்து வரும் புகாா்கள் குறித்து எடுத்துக்கூறி, பேருந்துகளை உரிய நேரத்தில், குறித்த வழித்தடங்களில் இயக்க வேண்டும். நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கவேண்டும். குறிப்பாக நிரவி பகுதியில் வரையறுக்கப்பட்ட தடத்தில் கண்டிப்பாக பேருந்தை இயக்கவேண்டும். கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி, முகக்கவசம் அனைவரும் அணிந்திருப்பதை நடத்துநா்கள் உறுதி செய்யவேண்டும் என அதிகாரி கலியபெருமாள் அறிவுறுத்தினாா். கூட்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.