முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் புதிதாக கரோனா பாதிப்பில்லை

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி ஒருவருக்கும் கரோனா தொற்று இல்லை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி ஒருவருக்கும் கரோனா தொற்று இல்லை என நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 74 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி யாருக்கும் கரோனா தொற்று இல்லை.

மாவட்டத்தில் இதுவரை 2,45,139 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,837 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,551 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,21,704 பேருக்கும், 2-ஆவது தவணையாக 83,994 பேருக்கும் என 2,05,698 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →