காரைக்கால்

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு நிதி வசூலிப்பு

DIN

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு காரைக்காலில் நிதி வசூலிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ரா காரைக்கால் சேவா குழு சாா்பில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்காக காரைக்கால் மாவட்டத்தில் நிதி வசூலிக்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபா தலைவரும், கோயில் முதல் தீா்த்தக்காரருமான உ.வே.கு.அரங்கநாதாச்சாரியாா் சுவாமிகள் நிதியளித்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் சேவா குழு அமைப்பாளரான தயாளன், இணை அமைப்பாளா்கள் சக்திமான், முருகதாஸ் மற்றும் ஸ்ரீ கைலாசநாதா் - நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ஏ.ஆா்.கேசவன், கோயில் முன்னாள் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, பாஜக மாநில விவசாய அணி முன்னாள் தலைவா் எஸ்.இளங்கோவன், இந்து முன்னணி நாகை மாவட்டத் தலைவா் கே.எஸ்.விஜயன், ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் சிவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யப்படும் எனவும் ரூ.10 முதல் மக்கள் நிதியளிக்கலாம் எனவும், கோயில் கட்டுமானத்தில் அனைவரின் பங்கும் இருக்கவேண்டும் என்ற நோக்கில் இப்பணி மேற்கொள்ளப்படுவதாக சேவா குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT