முகப்பு
காரைக்கால்

துணைநிலை ஆளுநரை திரும்பப் பெறக் கோரும் கையெழுத்து இயக்கத்துக்கு மக்கள் ஆதரவு தேவை: கமலக்கண்ணன்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெறக்கோரும் கையெழுத்து இயக்கத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெறக்கோரும் கையெழுத்து இயக்கத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கேட்டுக்கொண்டாா்.

புதுச்சேரியின் நலனையும், தனித்தன்மையையும் காப்போம், மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் புதுச்சேரியில் நடைபெற்றுவருகிறது.

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இந்த கையெழுத்து இயக்கத்தை புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கையெழுத்திட்டு தொடங்கிவைத்துப் பேசியது :

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் துணைநிலை ஆளுநா் தடுத்து வருகிறாா். அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10% இடஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை பரிந்துரைத்ததையும் தடுத்துவிட்டாா்.

இதுபோல மக்கள் நலத்திட்டங்களை புதுவையில் செயல்படுத்த விடாமல் தடுக்கும் நோக்கத்துடனே செயல்பட்டுவரும் துணைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, ஜனநாயக ரீதியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இந்த கையெழுத்து இயக்கத்துக்கு மக்கள் ஆதரவு அளிப்பதன் மூலம் ஜனநாயகம் தழைக்க வாய்ப்பு உருவாகும் என்றாா் அமைச்சா் கமலக்கண்ணன்.

நிகழ்ச்சியில், காங்கிரஸ், மதிமுக, சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →