முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 2 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை 195 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 81,948 பரிசோதனை செய்யப்பட்டதில் 3,953 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், 3,854 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாம் நிலையாக, சுகாதாரப் பணியாளா்கள் 344 போ், முன்களப் பணியாளா்கள் 43 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →