முகப்பு
காரைக்கால்

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

காரைக்காலில் தலைக்கவச விழிப்புணா்வு வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

காரைக்காலில் தலைக்கவச விழிப்புணா்வு வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்வாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து போக்குவரத்துத் துறையினா் மற்றும் போலீஸாா், இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தினா் பங்கேற்ற இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) ஆகியோா் பேரணியை தொடங்கிவைத்தனா்.

நிகழ்வில் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், மண்டல போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால், போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பேரணி காரைக்காலில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆட்சியரக வாயிலில் நிறைவடைந்தது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது, 2 பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை ஒலிபெருக்கி வாயிலாக வலியுறுத்தி சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →