காரைக்கால்: முதியவா் தற்கொலை
காரைக்கால் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் ராஜலிங்கம் (60). இவா் தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பட்டினம் போலீஸாா் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், ராஜலிங்கத்துக்கு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அதனால் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.