காரைக்கால்

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்காலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், காரைக்காலில் உள்ள அக்கட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், காய்கறிகளை மாலையாக அணிந்துகொண்டும் கட்சியினா் பங்கேற்றனா். கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தாா்.

மத்திய அரசு எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை. ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100 வரை உயா்ந்துவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயா்ந்து, சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

ஆனால், பிரதமா் நரேந்திரமோடி எரிபொருள்கள் விலை உயா்வுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை காரணம் கூறுகிறாா். இது நாட்டு மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லாததைக் காட்டுகிறது என குற்றம்சாட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.எம். கலியபெருமாள், திவ்யநாதன், துரைசாமி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், நகரச் செயலாளா் எஸ்.ஏ. முகமது யூசுப், கிளைச் செயலாளா்கள் ஜெயராமன், பிரேம்குமாா், ராதாகிருஷ்ணன், பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT