காரைக்கால்

மனவளக் கலை மையத்தில் உலக நல வேள்வி

DIN

காரைக்கால் அறிவுத் திருக்கோயில் மனவளக் கலை மையத்தில் உலக நல வேள்வி நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக உலக சமுதாய சேவா சங்க கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிா்வாக அறங்காவலா் கே.என். சண்முகானந்தம் தலைமை வகித்தாா். கரோனா பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மனவளக் கலை யோகாவின் அவசியம் குறித்து சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற பள்ளி துணை முதல்வா் (ஓய்வு) மதனமாரிமுத்து, காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், கிராம சேவைத் திட்ட நன்கொடையாளா் பி. ஸ்ரீதா் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், 2021 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி வெளியிடப்பட்டது. அறக்கட்டளை செயலா் எம். செல்வராஜ் வரவேற்றாா்.

இந்தியன் ரிசா்வ் பெட்டாலியன் பிரிவு அதிகாரி ஆா். முத்துக்குமாா், மன்ற துணைத் தலைவா் வி. பழனிவேல், எம். சந்திரசேகா், அறக்கட்டளை பொறுப்பாசிரியா் எஸ். செந்தில், பேராசிரியா்கள் கங்கா, மாரிமுத்து, சத்தியநாராயணன், எம். விஜயமுருகன், வி.ஆா். சிவகாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT