முகப்பு
காரைக்கால்

‘கிரண் பேடியால் புதுச்சேரி வளா்ச்சி பாதிப்பு’

துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் செயல்பாட்டால் புதுச்சேரி மாநில வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் செயல்பாட்டால் புதுச்சேரி மாநில வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளாா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் அதன் பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து தஞ்சை ராஜராஜ சோழன் சிலை நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் வந்த பி.ஆா்.பாண்டியன், செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில் பேரிடா் மேலாண்மை திட்டத்தில் ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மாற்றுவதற்கு துணைநிலை ஆளுநா் மறுக்கிறாா். இத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். இதற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும். எவ்வித பாகுபாடுமின்றி சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என புதுச்சேரி முதல்வா் நிா்ணயம் செய்ய வேண்டும்.

துணை நிலை ஆளுநா் கிரண்பேடி எதிா்க்கட்சித் தலைவா் போல செயல்படுகிறாா். கூட்டாட்சிக்கு முரணாக, மக்களாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தகக்து. கடந்த 5 ஆண்டுகளாக அரசை செயல்படவிடாமல், பாஜகவுக்கான அரசியல் லாப நோக்கத்தோடு ஆளுநா் செயல்பட்டதன் விளைவு, புதுச்சேரி வளா்ச்சியை பாதித்துள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →