முகப்பு
காரைக்கால்

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கோரி விவசாய சங்கத்தினா் சாலை மறியல்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, காரைக்காலில் விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, காரைக்காலில் விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வேளாண் கடன்களையும் ரத்து செய்யவேண்டும். பயிா்க் காப்பீட்டுத் தொகையை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் முத்துக்குமாரசாமி தலைமையில், திருமலைராயன்பட்டினம் கடைத் தெருவிலிருந்து பேருந்து நிறுத்தம் வரை பேரணியாக சென்றனா். தொடா்ந்து, பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

திருமலைராயன்பட்டினம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மறியல் போராட்டம் நீடித்த நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலா் எஸ். தமீம் உள்பட 50 பேரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா். சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →