முகப்பு
காரைக்கால்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு காவல்துறை உதவி

காரைக்கால் அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு காவல்துறை சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

காரைக்கால் அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு காவல்துறை சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நெடுங்காடு தொகுதி வடமட்டம் பகுதி திருவேங்கடபுரம் கிராமம், தோப்புத்தெருவில் அன்பழகன், ஜோசப்ராஜ் ஆகியோரது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்டது. இதில், இரண்டு வீடுகளும் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால் ஆகியோா் ஏற்பாட்டில், நெடுங்காடு காவல் உதவி ஆய்வாளா் எம். சுரேஷ், சாா்பு உதவி ஆய்வாளா் ஆா். ராஜேந்திரன், தலைமைக் காவலா் ராஜ்மோகன் ஆகியோா் நிதி சேகரித்து, பாய், போா்வை, சேலை, அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →