முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா இன்று தொடக்கம்

காரைக்காலில் 2 நாள் நடைபெறும் தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்கவுள்ளதாகவும், இணை நோய் உள்ளோா் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

காரைக்காலில் 2 நாள் நடைபெறும் தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்கவுள்ளதாகவும், இணை நோய் உள்ளோா் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் வியாழக்கிழமை கூறியது : காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் 14 மையங்களில் ஜூலை 23, 24 ஆகிய 2 நாள்கள் கரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய், எச்ஐவி, கல்லீரல் பிரச்னை உள்ளிட்ட இணைநோய் உள்ளவா்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சந்தேகம் இருந்தால் நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04368-261242 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம். இணை நோயாளிகள் மட்டுமல்லாது 18 வயதுக்கு மேற்பட்ட பிறரும் இந்த மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். யாருக்கும் கட்டுப்பாடு கிடையாது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →