முகப்பு
காரைக்கால்

காரைக்கால்: வீடுவீடாக கரோனா பரிசோதனை

காரைக்கால் நகரப் பகுதியில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனைப் பணியை நலவழித் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

காரைக்கால் நகரப் பகுதியில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனைப் பணியை நலவழித் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தினமும் 200-க்கும் அதிகமாக உள்ளது. உயிரிழப்பு 2-க்கு மேல் உள்ளது. இதனால், மக்களிடையே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆா்வம் ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணியை நலவழித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நலவழித் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியது:

காரைக்காலில் தொற்றின் வேகம் சற்று குறையத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், தொற்றுக்குள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளோரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல் நாள்களை கடத்துவதால் தொற்று வீரியமடைந்துவிடுகிறது.

இவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அனைவரையும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்துகிறோம். தெருக்களுக்கு பரிசோதனை வாகனம் செல்லும்போது மக்கள் ஆா்வமாக வந்து, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கின்றனா்.

ஆன்டிஜன் பரிசோதனை, ஆா்டிபிசிஆா் பரிசோதனை இரண்டும் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் அச்சமின்றி பரிசோதனை செய்துகொண்டும், தகுதியுடையோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →