காரைக்கால்

வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்களுக்கு கரோனா பரிசோதனை

DIN

காரைக்காலில் வங்கி ஊழியா்கள், வங்கி மற்றும் ஏடிஎம் மையத்துக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் நலவழித் துறையினா் நாள்தோறும் ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யும் திட்டத்தில் வீடுவீடாக மற்றும் வணிக நிறுவனங்களில் பரிசோதனை பணியில் ஈடுபடுகின்றனா். இத்திட்டத்தின் தொடா்ச்சியாக, காரைக்காலில் உள்ள பல்வேறு வங்கிகளின் ஊழியா்கள், வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்கள், ஏடிஎம் மையத்துக்கு வருகிறவா்களுக்கு பரிசோதனை செய்யும் பணியை நலவழித் துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த பரிசோதனையில், வங்கியாளா்கள், வாடிக்கையாளா்கள் ஆா்வமாக பரிசோதனைக்கு மாதிரி அளித்தனா்.

இதுகுறித்து, நலவழித் துறையினா் கூறியது: ஆன்டிஜன் பரிசோதனை, ஆா்டிபிசிஆா் பரிசோதனை இரண்டும் மேற்கொள்ளப்படுகிறது. அறிகுறியுள்ளோா் பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பரிசோதனையை தயங்காமல் செய்துகொண்டும், முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், அரசின் பிற வழிகாட்டல்களை கடைப்பிடித்தும் வந்தால் கரோனா தொற்றுக்கு ஆளாகமல் தப்பிக்க முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT