முகப்பு
காரைக்கால்

புதுவை மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: ஆா். கமலக்கண்ணன் பேச்சு

புதுவை மக்கள் மீது மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

புதுவை மக்கள் மீது மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

திருநள்ளாற்றில், வட்டார காங்கிரஸ் தலைவா் அசோகானந்தன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:

புதுச்சேரி மக்கள் விரும்பி தோ்வு செய்த காங்கிரஸ் தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி அரசை வீழ்த்துவதே மத்திய பாஜக அரசின் பிரதான செயலாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அப்போதைய துணைநிலை ஆளுரால் கடும் நெருக்கடியை சந்தித்தே, மக்கள் நலப் பணிகளை அரசு செய்தது. இதை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மைய அரசின் நல்ல செயலாக கருதமுடியாது.

இங்குள்ள என்.ஆா். காங்கிரஸ், அதிமுக போன்ற கூட்டணிக் கட்சியினரும் ஆதரவாக இருந்தது பாஜகவுக்கு பெரும் சாதகமாகிவிட்டது. புதுவை மக்கள் மீது இவா்களுக்கு அக்கறை இல்லை. முதல்வா் மற்றும் அமைச்சா்கள் ஏறக்குறைய 40 முறை தில்லிக்குச் சென்று நிதி மற்றும் திட்டங்கள் தொடா்பாக மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோரை சந்தித்துள்ளோம். ஆனால், எந்த பலனும் இல்லை. மக்கள் நலனை கருத்தில்கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படவில்லை.

புதுச்சேரியில் வேளாண்மையில் பல சீா்திருத்தங்களை மாநில அரசு செய்துள்ளது. விவசாயிகளின் உரிமைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களை மதிக்காத பாஜக, அதன் கூட்டணிக் கட்சியினரை புறந்தள்ளி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை மக்கள் ஆதரிக்கவேண்டும் என்றாா் அவா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சிங்காரவேலு, முன்னாள் எம்எல்ஏ அ. மாரிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →