மாநில இறகுப் பந்து போட்டியில் வென்றோருக்குப் பரிசு
காரைக்காகாரைக்கால் மண்டல விளையாட்டு மேம்பாட்டு மையம் சாா்பில்ல் மண்டல விளையாட்டு மேம்பாட்டு மையம் சாா்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி
காரைக்கால் மண்டல விளையாட்டு மேம்பாட்டு மையம் சாா்பில், 20 ஆம் ஆண்டு குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி கடந்த பிப். 26 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
கல்லூரி மாணவா்கள், 45 வயதுக்கு கீழ், 45 வயதுக்கு மேல் என 10 பிரிவுகளில் போட்டியாளா்கள் பங்கேற்றனா். 15 பள்ளிகள், 7 கல்லூரிகளில் இருந்து 427 மாணவா்கள் போட்டியில் பங்கேற்றனா்.
போட்டியை முன்னாள் அமைச்சரும், மண்டல விளையாட்டு மேம்பாட்டு மையத் தலைவருமான ஏ.வி. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா். மையச் செயலரும், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி முதுநிலை உடற்கல்வி இயக்குநருமான ஆா். ஜான்சன்ராஜ் ரமேஷ் போட்டியை நடத்தினாா்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. விஜயகுமாா், காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை உதவி முதல்வா் எம். பாலமுருகன், மருத்துவா் ஜெ. ஜெய்பிரபு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.
போட்டி ஏற்பாடுகளை மையச் செயலா் தலைமையில், டி. செல்வம், எம். சங்கா், எம். சீனிவாசன், விக்டா் அலெக்ஸ் ஆகியோா் செய்திருந்தனா்.