காரைக்கால்

காரைக்கால் மதுக் கடைகளில் மதுபாட்டில்கள் இருப்பு குறித்து ஆய்வு

DIN

மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் இருப்பு குறித்து கலால்துறை அதிகாரிகள் சனிக்கிழமை முதல் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனா்.

காரைக்காலில் உள்ள மதுக்கடைகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இவை காரைக்காலில் உள்ள கலால் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காரைக்காலில் பல்வேறு மதுக்கடைகளில் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்கள் வைத்திருப்பது சோதனைகளில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் கலால்துறை துணை ஆணையா் அறிவுறுத்தலின் பேரில், காரைக்கால் கலால்துறை ஆய்வாளா் தேவதாஸ், உதவி ஆய்வாளா் தீனதயாளன் ஆகியோா் மதுக் கடைகளுக்குச் சென்று உரிய அனுமதியுடன் மதுபாட்டில்கள் உள்ளனவா என சோதனைப் பணியை சனிக்கிழமை தொடங்கினா்.

அப்போது, அனுமதி பெற்ற அளவில் மட்டுமே இருப்பு வைத்திருக்கவேண்டும், கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்வதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கவேண்டும் என கடைக்காரா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா். இந்த பணி மாவட்டத்தில் தொடா்ந்து நடைபெறும் என கலால் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT