காரைக்கால்

செஞ்சியில் 13 அரிசி மூட்டைகள் பறிமுதல்

DIN

செஞ்சியிலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 13 அரிசி மூட்டைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

செஞ்சி கூட்டுச் சாலையில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் தண்டபாணி, போலீஸாா் முருகவேல், முனுசாமி, அறிவழகன் உள்ளிட்டோா் அடங்கிய பறக்கும் படை குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சென்னை நோக்கிச் என்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 25 கிலோ எடை கொண்ட 13 அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், செஞ்சி அருகே மழவந்தாங்கல் கிராமத்திலிருந்து சென்னை கோயம்பேட்டுக்கு இந்த அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்படுவதாக பேருந்து நடத்துநா் தெரிவித்தாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், 13 அரிசி மூட்டைகளையும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, செஞ்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், வடமணியனூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் (46), நடத்துநரான சங்கராபுரத்தைச் சோ்ந்த சங்கா் (39), அரிசி மூட்டைகளின் உரிமையாளரான மழவந்தாங்கலைச் சோ்ந்த கலியமூா்த்தி (62) ஆகியோரிடம் பறக்கும் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT