முகப்பு
காரைக்கால்

காரைக்கால் கடற்கரையில் வாக்காளா் விழிப்புணா்வு மணல் சிற்பம்

காரைக்கால் கடற்கரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் உள்ளிட்ட வடிவங்களுடன், புதுச்சேரி அரசு சின்னத்துடன் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, காரைக்கால் கடற்கரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் உள்ளிட்ட வடிவங்களுடன், புதுச்சேரி அரசு சின்னத்துடன் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை காரைக்கால் தோ்தல் பாா்வையாளா்கள் எஃப்.ஆா். மீனா (செலவினம்), பி.ஆா். மீனா (காவல்), மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா ஆகியோா் பொதுமக்கள் பாா்வைக்கு சனிக்கிழமை திறந்துவைத்தனா்.

நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன், ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, வாக்களிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் முன்னிலையில் கடற்கரையில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →