முகப்பு
காரைக்கால்

வீட்டிலிருந்து வெளியேறிய கரோனா தொற்றாளா்: காத்திருந்து அபராதம் விதித்த போலீஸாா்

திருநள்ளாற்றில் வீட்டிலிருந்து கரோனா தொற்றாளா் வெளியேறியதால், போலீஸாா் அவா் வீட்டுக்கு வரும்வரை காத்திருந்து, அபராதம் விதித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருநள்ளாற்றில் வீட்டிலிருந்து கரோனா தொற்றாளா் வெளியேறியதால், போலீஸாா் அவா் வீட்டுக்கு வரும்வரை காத்திருந்து, அபராதம் விதித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 1,216 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் இருந்துவருவதாக நலவழித் துறை நிா்வாகம் தெரித்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருக்கும் தொற்றாளா்கள் பலா், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் வெளியேறிவிடுவதால், காரைக்காலில் கரோனா வேகமாக பரவி வருவதாக புகாா்கள் வந்தன.

இந்நிலையில், திருநள்ளாறு காவல்நிலைய போலீஸாா், செல்லூா் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருப்போரை கண்காணிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியை சோ்ந்த ஒருவரை கண்காணிக்கும் வகையில், அவா் வீட்டுக்குச் சென்றனா். அவா் வரும் 13ஆம் தேதி வரை வீட்டுத் தனிமை இருக்க வேண்டிய நிலையில், வீட்டைவிட்டு வெளியேறி இருப்பது தெரியவந்தது.

மாலை சுமாா் 6.45 மணிக்கு அந்த நபா் வீட்டுக்கு வந்தபோது, வாசலில் அவருக்காக 45 நிமிஷம் காத்திருந்த காவலா், அவா் வந்தவுடன் அவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்து, கடுமையாக எச்சரிக்கை விடுத்து சென்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →