காரைக்கால் அரசு மருத்துவமனைக்குமருத்துவ சாதனம்
காரைக்கால் மருத்துவமனை கரோனா தொற்றாளா்களுக்கு தேவையான ஆக்சோ ஃபுளோ மீட்டா்களை திருநள்ளாற்றை சோ்ந்த தனியாா் நிறுவனம் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது.
காரைக்கால் மருத்துவமனை கரோனா தொற்றாளா்களுக்கு தேவையான ஆக்சோ ஃபுளோ மீட்டா்களை திருநள்ளாற்றை சோ்ந்த தனியாா் நிறுவனம் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோருக்கு ஆக்சிஜன் வழங்கல் தொடா்பான சாதனங்கள் தேவை அதிகமுள்ளது. நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இவற்றை மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கி வருகின்றனா்.
திருநள்ளாறு ஜோதி லேபாரட்டரீஸ் நிறுவனம் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் ஆக்சோஃபுளோ மீட்டா்கள் (25 எண்ணிக்கை) மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நோயாளிக்கு சீரான முறையில் ஆக்சிஜனை அனுப்பும் சாதனம் இது என்றும், காரைக்கால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பெரிதும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), நிறுவன துணைப் பொதுமேலாளா் பாபு, முதுநிலை மேலாளா் வடிவேல், மேலாளா் சுதிா்வா்மா ஆகியோா் இருந்தனா்.