முகப்பு
காரைக்கால்

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி ஊழியா்களாகப் பணியாற்றி வரும் ஊழியா்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவாா்கள் என முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தப்படி, 19 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வரும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிற்சங்கத் தலைவா் ஸ்டீபன் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி நிலைய வாயிலில் ஊழியா்கள் கோஷங்கள் எழுப்பினா். போராட்டதுக்கு, காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக்அலாவுதீன், செயலாளா் பாலசுப்பிரமணியன், சங்கச் செயலாளா் இளங்கோவன், பொருளாளா் கருப்பையா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →