காரைக்காலில் 16 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 737 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 4, கோயில்பத்து 3, நல்லம்பல் 2, நெடுங்காடு 2, திருநள்ளாறு 2, கோட்டுச்சேரி, நிரவி, வரிச்சிக்குடி தலா 1 என 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 2,07,191 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,143 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,687 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.இதுவரை கரோனா தொற்றால் 256 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,06,124 பேருக்கும், 2-ஆவது தவணையாக 43,650 பேருக்கும் என 1,49,774 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.