காரைக்கால்

டெங்கு காய்ச்சல்: நலவழித்துறையினா் ஆய்வு

DIN

காரைக்காலில் ஒரே குடும்பத்தில் பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட பகுதியில் நலவழித் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காரைக்கால் திருநகா் குடியிருப்புப் பகுதியில் கடந்த வாரம் கல்லூரி மாணவா் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவா் குணமடைந்த நிலையில், அவரது தாயாருக்கும், அதே குடும்பத்தில் மேலும் ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இத்தகவலறிந்த நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் மற்றும் நோய் தடுப்புப் பிரிவினா் பாதிப்புக்குள்ளான வீட்டில் ஆய்வு செய்தனா். பின்னா், அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, ஒரு பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதை உறுதிப்படுத்தினா்.

மேலும், டெங்கு உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை சிறப்பு வாா்டுக்கு அனுப்பிவைத்த நலவழித் துறையினா், மற்றொருவரை பரிசோதிக்க ஏற்பாடு செய்தனா். அத்துடன், அப்பகுதியிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிப்பில் ஈடுபட்டனா்.

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், குடியிருப்புப் பகுதிகளிலும், வீடுகளை சுற்றியும் தண்ணீா் தேங்காதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT