முகப்பு
காரைக்கால்

பெருமாள் கோயிலில் இன்று முதல் புரட்டாசி வழிபாடு தொடக்கம்

காரைக்கால் பெருமாள் கோயிலில் சுப்ரபாத சேவையுடன் வெள்ளிக்கிழமை (செப்.17) முதல் புரட்டாசி மாத வழிபாடு தொடங்குகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

காரைக்கால் பெருமாள் கோயிலில் சுப்ரபாத சேவையுடன் வெள்ளிக்கிழமை (செப்.17) முதல் புரட்டாசி மாத வழிபாடு தொடங்குகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோயில்களில் மூலவா், உத்ஸவருக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம், ஆராதனை, சகஸ்ரநாம அா்ச்சனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 1ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் சிறப்பு வழிபாடுகளுக்கு கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. காலை 6 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் வழிபாடு தொடங்குகிறது. மாலை சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் இந்த வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பக்தா்கள் முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →