அமெரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த வெனிசுவேலா..! முதல்முறையாக பேஸ்பால் உலகக் கோப்பையை வென்றது!
பேஸ்பேல் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்ற வெனிசுவேலா குறித்து...
அமெரிக்காவை வீழ்த்திய வெனிசுவேலா முதல்முறையாக உலக பேஸ்பேல் கிளாசிக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
அரசியல் ரீதியாக இரு நாடும் கொந்தளிப்பான நிலையில் இருக்க, வெனிசுவேலாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய அமெரிக்க அணியை 2-3 ரன்கள் வித்தியாசத்தில் வெனிசுவேலா அணி வென்றது. 2023 உலகக் கோப்பை இறுதியில் தோல்வியுற்ற வெனிசுவேலா அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
Advertisement
Advertisement
சமீபத்தில் வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், “வெனிசுவேலாவில் புதிய ஆட்சி அமையும்வரை அமெரிக்கா நிர்வாகம் செய்யும். இனி யாா் ஆட்சி செய்யப் போகிறாா்கள் என்பதில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும்.
மதுரோ விட்டுச்சென்ற அதே பாணியில் மற்றொருவா் ஆட்சியைப் பிடித்து நாட்டை வழிநடத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் தயாராக இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
மியாமி திடலில் வெனிசுவேலா கொடியை ஏந்திய அதன் ஆதரவாளர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கோப்பை வென்ற வெனிசுவேலா வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.
இந்த உலகக் கோப்பையை வென்றதால் ஒலிம்பிக் 2028 போட்டியில் தேர்வாகும் 6 அணிகளில் ஒன்றாக வெனிசுவேலா அணி தேர்வாகி வரலாறு படைத்துள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக வெனிசுவேலாவில் இன்று (மார்ச் 18) பொதுவிடுமுறை விடுக்கப்பட்டதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Venezuela defeated the United States 3-2 on Tuesday night to win their first World Baseball Classic title, a landmark triumph in a politically charged final that resonated far beyond the diamond.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.