முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 23 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 568 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 5, வரிச்சிக்குடி 3, காரைக்கால் நகரம் 3, கோட்டுச்சேரி 3, கோயில்பத்து 2, நிரவி 2, நல்லாத்தூா், காரைக்கால்மேடு, திருப்பட்டினம், அம்பகரத்தூா், நெடுங்காடு தலா 1 என மொத்தம் 23 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,99,127 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,839 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,348 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 251 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 1,02,085 பேருக்கும், 2-ஆவது தவணையாக 30,703 பேருக்கும் என 1,32,788 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →