முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 32 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 591 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 10, கோட்டுச்சேரி 6, வரிச்சிக்குடி 5, நிரவி 3, திருநள்ளாறு 3, விழிதியூா் 2, திருப்பட்டினம், நெடுங்காடு, நல்லாத்தூா் தலா 1 என மொத்தம் 32 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,99,718 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,871 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,369 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 251 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,02,473 பேருக்கும், 2-ஆவது தவணையாக 31,810 பேருக்கும் என 1,34,283 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →